கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டியால் பரபரப்பு!

செய்தியாளர்கள் கமலிடம் கேட்ட கேள்விக்கு கமல் கொடுத்த விளக்கம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Kamal, Vikram, Tamil Cinema 27-May-2022 – லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ திரைப்படம் வரும் ஜூன் மூன்றாம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Kamal, Vikram, Tamil Cinema 27-May-2022

‘விக்ரம்’ படத்தின் புரமோஷன் பணிக்காக நாடு முழுவதும் கமலஹாசன் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் வட இந்தியாவில் ‘விக்ரம்’ படத்தின் புரமோஷனின் போது, செய்தியாளர்களால் வட இந்தியா மற்றும் தென்னிந்தியா பேதம் குறித்த கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளிக்கும் வகையில், ‘நான் ஒரு இந்தியன்! எனக்கு வட இந்தியா தென்னிந்தியா என்ற பேதம் கிடையாது. தாஜ்மஹால் என்னுடையது, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உங்களுடையது. கன்னியாகுமரி எந்த அளவுக்கு உங்களுக்கு சொந்தமோ, அதே போல் காஷ்மீர் எனக்கு சொந்தம்’ என்று கூறியுள்ளார். அவருடைய இந்த பதில் பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.