பாஜக தலைவர் அண்ணாமலை நடிகராக அவதாரம் – சம்பளம் வெறும் இவ்வளவுதானா?

நடிகராக களமிறங்கிய பாஜக தலைவர் அண்ணாமலை!

K. Annamalai, Arabi, Tamil Cinema 27-May-2022 – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு கன்னட திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருப்பதாகவும் இந்த படத்தின் டீசர் இன்று வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

அந்தவகையில் ‘அரபி’ என்ற கன்னட படத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடித்துள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தில் அண்ணாமலை நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ளதாகவும் இந்த படத்தில் நடிப்பதற்காக அவர் ஒரே ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் பெற்று உள்ளதாகவும் கூறப்படுகிறது .

இந்த கன்னட படமானது இரண்டு கைகளையும் இழந்த நிலையில் சர்வதேச அளவில் சாதனை படைத்த விசுவாஸ் என்ற நீச்சல் வீரனின் வாழ்க்கையை மையமாக கொண்டு தயாராகி வருகிறது. விஸ்வாஸின் வாழ்க்கையால் மிகவும் ஈர்க்கப்பட்ட கன்னட இயக்குநர் ராஜ்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

விஜய் ராகவேந்திரா புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் அறிவிப்பு கடந்த 2019 ஆம் ஆண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version