‘இந்த மைதானத்தில இருந்து ஒருத்தன் மட்டும் தான் வெளியில போக முடியும்’ அக்னி சிறகுகள் டீஸர்!

விஜய் ஆண்டனி – அருண் விஜய் நடிப்பில் வெளியான மாஸ் டீஸர்!

Agni Siragugal, Vijay Antony, Arun Vijay, Akshara Haasan, Tamil Cinema 27-May-2022 – விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் நடிப்பில் நவீன் இயக்கத்தில் உருவான ‘அக்னி சிறகுகள்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Agni Siragugal, Vijay Antony, Arun Vijay, Akshara Haasan, Tamil Cinema 27-May-2022

விரைவில் ரிலீசாக இருக்கும் இந்த படத்தின் டீஸர் சற்று முன் வெளியாகியுள்ள நிலையில், டீசர் வீடியோ வைரலாகி வருகிறது. ‘இந்த மைதானத்தில இருந்து ஒருத்தன் மட்டும் தான் உயிரோட வெளிய போக முடியும்.. அது ஜெயிக்கிறவன் மட்டும் தான் முடிஞ்சா என்ன ஜெயிச்சுக்கோ’ என்ற ஆவேசமான வசனங்களை கொண்ட இந்த டீசர் முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் காட்சிகளாக நிரம்பி உள்ளது.

விஜய் ஆண்டனி, அருண் விஜய், அக்சராஹாசன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘அக்னி சிறகுகள்’ திரைப்படம் நடராஜன் சங்கரன் என்பவர் இசை அமைப்பில் அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.