தளபதி 66 படத்தின் புதிய கலக்கலான அப்டேட்!
Vijay, Rashmika, Thalapathy 66, Tamil Cinema 27-May-2022 – நடிகர் விஜய் நடித்து வரும் ‘தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியானது என்பதும் ஏற்கனவே குறிப்பிட்டவை.

இந்நிலையில் ‘தளபதி 66’ திரைப்படத்தில் ஏற்கனவே ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது என்பதை பார்த்தோம். விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், சம்யுக்தா சண்முகநாதன், பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வரும் நிலையில் தற்போது மேலும் இரண்டு நட்சத்திரங்கள் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் ‘தளபதி 66’ படத்தில் விஜய்யின் ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் ஹர்ஷிதா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த ‘பெங்குயின்’ படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் அத்வைத் ஆகிய இருவரும் இணைந்துள்ளனர். இந்த இருவர் குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
வம்சி இயக்கத்தில், தில் ராஜூ தயாரிப்பில், தமன் இசையில் உருவாகி வரும் ‘தளபதி 66’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.