அல்டிமேட் ஸ்டார் தல அஜித் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்!
Ajith Kumar, AK 61, Tamil Cinema 27-May-2022 – தல அஜித் வலிமை படத்தை அடுத்து மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு ஹைதாராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அஜித், ஷாலினி, மகள் அனௌஷ்காவுடன் சேர்ந்து தானும், மனைவியும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளரான தயாநிதி அழகிரி.

அந்த புகைப்படத்தை பதிவிட்டு அவர் கூறியிருப்பது, ‘சும்மாவா சொன்னாங்க அல்டிமேட் ஸ்டார்னு. அவருடன் இருக்கும்போது இருக்கும் எனர்ஜியை விவரிக்க முடியாது. அவரை பார்த்து வியக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.
இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலர் பலவிதமான கேள்விகளையும் லைக்ஸ் களையும் அள்ளி குவித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
chumma va sonnanga ULTIMATE ⭐️ nu! 🔥
— Dhaya Alagiri (@dhayaalagiri) May 27, 2022
that energy when he’s around cannot be explained. totally in awe of this man. 🤩#AjithKumar #Thala pic.twitter.com/YHmnEXEO13