‘ஏகே 61’ பட நடிகை குழந்தைகளுடன் குழந்தையாக மாறி நடனமாடும் வீடியோ வைரல்!

ஏகே 61 பட நடிகையின் குழந்தை தனமான நடனம் அனைவரையும் கவர்ந்து வருகிறது

Ajith Kumar, Manju Warrier, AK 61, Tamuil Cinema 27-May-2022 – அஜித் நடித்துவரும் ஏகே 61 திரைப்படத்தில் மஞ்சுவாரியார் நாயகியாக நடிக்கவிருக்கிறார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்த நிலையில் மஞ்சுவாரியர் நடித்த மலையாள திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றியை பெற்றதை அடுத்து அந்த சந்தோஷத்தில் அவர் குழந்தைகளுடன் நடனமாடிய வீடியோவை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

Ajith Kumar, Manju Warrier, AK 61, Tamuil Cinema 27-May-2022 001

நடிகை மஞ்சுவாரியர் முக்கிய வேடத்தில் நடித்த ‘ஜாக் என் ஜில்’ என்ற திரைப்படத்தை இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான சந்தோஷ் சிவன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராமன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த படம் கடந்த 20 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ஊடகங்களும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்துள்ளதால், இந்த படத்தின் வசூல் திருப்திகரமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் மஞ்சுவாரியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘ஜாக் அண்ட் ஜில்’ திரைப்படம் வெளியாகி நல்ல வெற்றியை பெற்றுள்ளதை குறிப்பிட்டு, குழந்தைகளுடன் நடனமாடிய வீடியோவை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

அதில் ‘நடனத்தை விட வேறு சிறப்பானது எதுவும் இல்லை’ என்றும் அவர் கேப்ஷனாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.