‘தளபதி 66’ படம் குறித்த மாஸ் அப்டேட் கொடுத்த புஸ்ஸி ஆனந்த் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

தளபதி 66 படத்தின் வெளியான புதிய தகவல்

Thalapathy 66, Vijay, Rashmika Mandanna, tamil cinema 27-May-2022 – விஜய் நடித்து வரும் ‘தளபதி 66’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில் இந்த படம் குறித்த சூப்பர் அறிவிப்பு ஒன்றை விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Thalapathy 66, Vijay, Rashmika Mandanna, tamil cinema 27-May-2022 001

வம்சி இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில், தில் ராஜூ தயாரிப்பில், தமன் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘தளபதி 66’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது என்பதும் இந்த படப்பிடிப்பில் விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் ‘தளபதி 66’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக புஸ்ஸி ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளோடு புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.

Thalapathy 66, Vijay, Rashmika Mandanna, tamil cinema 27-May-2022 002

மேலும் இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடு என்பதையும் அவர் உறுதி செய்துள்ளார். இந்த நிலையில் ‘தளபதி 66’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்த நாள் ஜூன் 21 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.