விக்ரம் படத்தின் கேரக்டர் பற்றி பேசிய கமல்ஹாசன்
Vikram, Kamal, Tamil Cinema 26-May-2022 – உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது. ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் கமல் தயாரித்து நடித்திருக்கும் இப்படத்தை கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி மற்றும் ஃபஹத் ஃபாசில் ஆகியோரும் நடித்துள்ளனர்.

அனிருத் இசையில் உருவான ‘விக்ரம்’ படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. சில வாரங்களுக்கு முன்பு அனிருத் இசையில் கமல் எழுதி பாடிய ‘பத்தல பத்தல’ பாடல் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் ஒரு சில சர்ச்சைகளில் சிக்கியது.
‘பத்தல பத்தல’ என்ற பாடல் வரிகளில் கமல் மத்திய அரசை கேலி செய்து பாடியுள்ளதாக சில சர்ச்சைகள் எழுந்தது. இந்நிலையில் அடுத்த வாரம் வெளியாகவுள்ள விக்ரம் படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது.
இன்று படத்தின் ப்ரோமோஷனுக்காக கமல் மற்றும் லோகேஷ் கனகராஜ் டெல்லி சென்றுள்ளனர். அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்த கமல் மற்றும் லோகேஷ் ‘விக்ரம்’ படத்தை பற்றி பல ஸ்வாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளனர்.
குறிப்பாக கமல் இப்படத்தில் தனது கதாபாத்திரம் பற்றி பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “விக்ரம் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் மர்மமாகவே இருக்கும். இந்த கதாபாத்திரம் நல்லவனா இல்லை கெட்டவனா என்று கண்டுபிடிக்காத அளவு இருக்கும். மேலும் இப்படம் முழுக்க முழுக்க லோகேஷின் திரைப்படமாகவே உருவாகியுள்ளது. இதில் நான் வெறும் நடிகராகவே நடித்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.