பிக்பாஸ் சீசன் 6 இல் டி. இமானின் முன்னாள் மனைவி என்ட்ரி கொடுப்பாரா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

பிக்பாஸ் சீசன் 6 இல் மோனிகா ரிச்சர்ட் கலந்து கொள்வாரா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு

D. Imman, Monika Richard, Tamil Cinema 26-May-2022 – விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் விரைவில் 6 வது சீசன் தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது.

D. Imman, Monika Richard, Tamil Cinema 26-May-2022

இந்த சீசனுக்கான போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் கடந்த சில தினங்களாக பரபரப்பு செய்திகளில் இடம் பெற்றுவரும் இசையமைப்பாளர் டி. இமானின் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட்ஸ் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

டி. இமானின் சமூக வலைத்தள பதிவுகளுக்கு பதிலடி கொடுத்து வரும் மோனிகா தற்போது சமூக வலைதளங்களில் டிரென்ட் ஆகியுள்ளார். குறிப்பாக டி. இமான் தனது இரண்டாவது மனைவியின் மகளை தனது மூன்றாவது மகளாக ஏற்றுக் கொண்டதாக கூறியதற்கு பதிலடி கொடுத்துள்ள மோனிகா ரிச்சர்ட், இரண்டு நாய்க் குட்டிகளை தன் மகள்களாக ஏற்றுக் கொண்டதாக கூறியது அதிரடியாக இருந்தது.

இந்நிலையில் டி. இமானின் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நிகழ்ச்சி பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.