நயன்தாராவின் “எனது கருவில் பூத்த ஓர் இளைய நிலவு நீ” வீடியோ வைரல்!

நயன்தாராவின் புதிய படத்தின் பாடல் வைரல்!

Nayanthara, 02, Tamil Cinema 26-May-2022 – நயன்தாரா நடித்த ‘O2’ என்ற திரைப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அடுத்த கட்டமாக இந்த படத்தின் ‘எனது கருவில் பூத்த ஓர் இளைய நிலவு நீ’ என்ற பாடல் வெளியாகி இணைதளங்களில் வைரலாகி வருகிறது.

Nayanthara, 02, Tamil Cinema 26-May-2022

விஷால் சந்திரசேகர் இசையில் ராஜேஷ் கிரிபிரசாத், மோகன் ராஜன் எழுதிய இந்த பாடலை பிருந்தா சிவக்குமார் பாடியுள்ளார். மெலடி பாடல் ஆக உருவாகியிருக்கும் இந்த பாடல் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

நயன்தாரா, ரித்விக் உள்பட பலரது நடிப்பில் ஜி.கே. விக்னேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தமிழழகன் ஒளிப்பதிவில் செல்வா படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர். பிரபு தயாரித்துள்ளனர்.