‘கே.ஜி.எஃப் 2’ அதிரடி இயக்குனரின் அடுத்த படத்தில் கமல்ஹாசன் – இந்த கேரக்டரா!

‘கே.ஜி.எஃப் 2’ இயக்குனரின் அடுத்த படத்தில் கமலுக்கு கொடுத்த கேரக்டர்!

Kamal Haasan, KGF 2, N. T. Rama Rao Jr., Prashanth neel, Tamil Cinema 26-May-2022 – சமீபத்தில் வெளியான ‘கே.ஜி.எஃப் 2’ திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும், 1,300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என்பதும் தென்னிந்திய திரைப்படம் செய்த இந்த சாதனையை இந்தியாவயே திரும்பி பார்க்க வைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Kamal Haasan, KGF 2, N. T. Rama Rao Jr., Prashanth neel, Tamil Cinema 26-May-2022

இதனை அடுத்து இந்த படத்தின் நாயகன் யாஷ் மற்றும் இயக்குனர் பிரசாந்த் நீல் ஆகிய இருவருக்கும் நாடு முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், இயக்குனர் பிரசாந்த் நீல் ஏற்கனவே பிரபாஸ் நடித்த ‘சலார்’ என்ற படத்தை இயக்கி முடித்த நிலையில் தற்போது அடுத்த படத்திற்கும் தயராகியுள்ளார்.

பிரசாந்த் நீல் இயக்கும் அடுத்தப் படத்தின் நாயகனாக ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க இருப்பதாகவும் இது அவருடைய 31வது படம் என்றும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தில் ஹீரோவுக்கு இணையாக ஒரு வில்லன் கேரக்டர் இருப்பதாகவும், அந்த வில்லன் கேரக்டரில் நடிக்க கமல்ஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

Kamal Haasan, KGF 2, N. T. Rama Rao Jr., Prashanth neel, Tamil Cinema 26-May-2022 001

இந்த கேரக்டர் மிகவும் வலுவானது என்பதால் கமல்ஹாசன் தான் பொருத்தமாக இருப்பார் என்று பிரசாத் நீல் கருதுவதாகவும் இருப்பினும் கமல்ஹாசன் தரப்பில் இருந்து இன்னும் சம்மதமோ அல்லது எவ்வித மறுப்போ வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

இத்தகவல் உறுதி செய்யப்பட்டால் முதன்முதலாக ஜூனியர் என்.டி.ஆரின் திரைப்படத்தில் நெகடிவ் ரோலில் கமல்ஹாசன் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.