வைரலாகி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா!

சூர்யா நடித்து வரும் படம் குறித்து பரவிவரும் வதந்திகளுக்கு முடிவுகட்டிய சூர்யா!

Suriya, Krithi Shetty, Bala, Suriya 41, Tamil Cinema 26-May-2022 – சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வந்த ‘சூர்யா 41’ படம் குறித்து பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் ஒட்டுமொத்த வதந்திகளுக்கும் ஒரே ஒரு புகைப்படத்தினை வெளியிட்டு நடிகர் சூர்யா தனது சமூக வலைதளத்தின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

Suriya, Krithi Shetty, Bala, Suriya 41, Tamil Cinema 26-May-2022 001

இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சூர்யா 41’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு கன்னியாகுமரி அருகே நடந்தது. இந்த படப்பிடிப்பின்போது பாலாவும் சூர்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இதனை அடுத்து சூர்யா படப்பிடிப்பில் இருந்து வெளியேறி சென்னை திரும்பி விட்டதாகவும் கூறப்பட்டது.

இவ்வாறான வதந்திகளுக்கு ஏற்கனவே ‘சூர்யா 41’ படக்குழுவினர் மறுப்பு தெரிவித்து இருந்த நிலையில் மீண்டும் மீண்டும் வதந்திகள் பரவி வந்தது. இந்த நிலையில் பாலாவுடன் இருக்கும் புகைப்படத்தை சூர்யா பகிர்ந்து, ‘படப்பிடிப்புக்கு மீண்டும் தயாராக உள்ளோம்’ என்று சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

Suriya, Krithi Shetty, Bala, Suriya 41, Tamil Cinema 26-May-2022

இந்த ஒரே ஒரு புகைப்படத்தின் மூலம் இந்த படம் குறித்து பரவிய அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் மீனவர் கேரக்டரில் நடித்திக்கும் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையில், பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில் தயாராகி வரும் ‘சூர்யா 41’ திரைப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.