ரஜினி – கமல் சேர்ந்து நடிக்க என்னிடம் கதை உள்ளது என பகிர்ந்த பிரபல இயக்குனர்!

ரஜினி – கமல் இருவரையும் சேர்த்து படம் இயக்க முன்னிற்கும் பிரபல இயக்குனர்!

Rajinikanth, Kamal Haasan, Alphonse Puthren, Tamil Cinema 26-May-2022 – கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரையும் இணைக்கும் வகையில் ஒரு கதை தன்னிடம் இருப்பதாகவும், ஆனால் இருவரையும் இன்னும் ஒரு முறை கூட பார்க்கும் அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை என்றும் பிரபல இயக்குனர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

Rajinikanth, Kamal Haasan, Alphonse Puthren, Tamil Cinema 26-May-2022

‘பிரேமம்’ என்ற ஓர் படத்தின் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்டவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான நயன்தாராவின் ‘கோல்ட்’ என்ற திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அவர் பகத் பாசில், நயன்தாரா நடித்து வரும் ‘பாட்டு’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

Rajinikanth, Kamal Haasan, Alphonse Puthren, Tamil Cinema 26-May-2022 001

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பே ரஜினியை சந்தித்து அவருக்கு ஒரு கதை சொல்ல முயற்சித்ததாக அல்போன்ஸ் புத்திரன் கூறிய நிலையில், தற்போது தனது சமூக வலைத்தளத்தில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவருக்குமான ஒரு கதையை வைத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரையும் சந்திக்க நேர்ந்தால் அவர்களுக்காக நான் உருவாக்கி வைத்திருக்கும் கதையை கூறுவேன் என்றும் அந்த கதை நிச்சயம் இருவருக்கும் பிடிக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறிய அல்போன்ஸ் புத்திரன், ஆனால் எனக்கு அதிர்ஷ்டம் இல்லாததால் இன்னும் என் வாழ்நாளில் இருவரையுமே ஒரு முறை கூட சந்திக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Rajinikanth, Kamal Haasan, Alphonse Puthren, Tamil Cinema 26-May-2022 003

ஆனால் அதே நேரத்தில் எனக்கு அதிர்ஷ்டம் இருந்து, எதிர்காலத்தில் கமல்ஹாசன் அல்லது ரஜினிகாந்தை சந்திக்க நேரிட்டால் அவர்களிடம் அந்த கதையை கூறுவேன் என்றும் அந்த கதை அவர்களுக்கு பிடித்துவிட்டால் என்னுடைய முழு திறமையையும் அந்த படத்தில் பயன்படுத்தி, நல்லதொரு பொழுதுபோக்கு படமாக எடுப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இத்தகவல் கமல்ஹாசன் மற்றும் ரஜினியை போய் சேர்ந்து, இருவரையும் சந்திக்கும் வாய்ப்பை அல்போன்ஸ் புத்திரனுக்கு கிடைக்குமா? இருவரையும் இயக்கும் வாய்ப்பை பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து தன பார்க்க வேண்டும்.