நடிகையும் பிக்பாஸ் போட்டியாளராகவும் இருந்த ஒருவர் சில்க் ஸ்மிதாவாகவே மாறியுள்ளார் – ரசிகர்கள் செம வரவேற்பு!

சில்க் ஸ்மிதாவாக மாறிய நடிகைக்கு ரசிகர்கள் செம ரெஸ்பான்ஸ்!

Kaajal Pasupathi, Sandy Master, Bigg Boss Tamil, Tamil Cinema 26-May-2022 – பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஒருவர், சில்க் ஸ்மிதா மாதிரியே போட்டோஷுட் புகைப்படங்கள் எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் செம வரவேற்பை பெற்றுவருகிறது.

Kaajal Pasupathi, Sandy Master, Bigg Boss Tamil, Tamil Cinema 26-May-2022 001

பிக்பாஸ் முதலாவது சீசன் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் நடிகை காஜல். நடன இயக்குநர் சாண்டியின் முன்னாள் மனைவியான இவர், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அவரது பதிவுகள் சினிமா சம்பந்தப்பட்டது மட்டுமின்றி அரசியல் மற்றும் சமூக கருத்துக்களையும் அடங்கி இருந்தன என்பதும், நக்கலாகவும், காமெடியாகவும் அதே நேரத்தில் அழுத்தமாகவும் தனது கருத்துக்களை பதிவு செய்து வருவார்.

இந்நிலையில் சில்க் ஸ்மிதா போன்ற காஸ்டியூமில் சமீபத்தில் போட்டோ ஷூட் புகைப்படத்தை எடுத்து அதனை தனது சமூக வலைத்தள பக்கத்தில் காஜல் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ் குவித்து வருகிறது. இந்த புகைப்படத்தின் கேப்ஷனாக ‘தலைவி மாதிரி யாராலும் வர முடியாது, இருந்தாலும் தலைவி மாதிரி டிரை பண்றது தப்பு இல்லை’ என்று பதிவு செய்துள்ளார்.