தங்கர் பச்சான் படத்தில் இணைய இருக்கும் முக்கிய பிரபலங்கள் மூவர் – இது வேற லெவல் கூட்டணி!

மூன்று முக்கிய பிரபலங்களை வைத்து இயக்கும் தங்கர் பச்சான் படம்!

Thangar Bachan, Gautham Vasudev Menon, Bharathiraja, Yogi Babu, Tamil Cinema 26-May-2022 – தமிழ் சினிமாவில் குடும்ப பாங்கான படங்களை எடுப்பவர் என்ற பெயர் பெற்ற இயக்குனர் தங்கர் பச்சானின் அடுத்த திரைப்படத்தில் மூன்று பிரபலங்கள் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Thangar-Bachan-Gautham-Vasudev-Menon-Bharathiraja-Yogi-Babu-Tamil-Cinema-26-May-2022.jpg

‘அழகி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் ‘தென்றல்’, ‘பள்ளிக்கூடம்’ உள்பட பல விதமான திரைப்படங்களை இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தங்கர்பச்சான் தனது மகன் விஜித் பச்சான் நடிப்பில் உருவாகியுள்ள ‘டக்கு முக்கு திக்கு தாளம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில் தங்கர்பச்சானின் அடுத்த படத்தில் பாரதிராஜா, கௌதம் மேனன் மற்றும் யோகிபாபு ஆகிய மூன்று பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர் என்றும் ‘கருமேகங்கள் ஏன் கலைகின்றன’ என்ற டைட்டிலில் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை 25 ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும் தங்கர்பச்சான் தெரிவித்துள்ளார்.

Thangar Bachan, Gautham Vasudev Menon, Bharathiraja, Yogi Babu, Tamil Cinema 26-May-2022 001

இந்த படத்தின் கதையை கேட்டதும் பாரதிராஜா, கௌதம் மேனன் ,யோகிபாபு ஆகியோர் உடனடியாக ஒப்புக் கொண்டுள்ளனர் என்றும் இதுவரை பார்க்காத வித்தியாசமான கேரக்டர்களில் இந்த மூவரையும் பார்க்கலாம் என்றும் தங்கர்பச்சான் தெரிவித்துள்ளார்.