வெளியான ஹிப்ஹாப் தமிழா ஆதியின் அடுத்த பட டைட்டில் – இயக்குனர் இவர்தான்!

ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிக்கும் அடுத்தப்பட டைட்டில் மற்றும் இயக்குனர்!

Hip Hop Tamizha Adhi, A.R.K. Saravanan, Veeran, Tamil Cinema 26-May-2022 – தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என்ற வகையில் வலம் வரும் ஜிவி பிரகாஷ் மற்றும் விஜய் ஆண்டனி வரிசையில் அடுத்து ஹிப் ஹிப் ஹாப் தமிழா ஆதியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Hip Hop Tamizha Adhi, A.R.K. Saravanan, Veeran, Tamil Cinema 26-May-2022

‘மீசையை முறுக்கு’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி அதன் பின் ‘நட்பே துணை’, ‘நான் சிரித்தால்’, ‘அன்பறிவு’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் ஆதி நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் திரைப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி ஹீரோவாக நடிக்கிறார் என்ற செய்தி வெளியானது.

Hip Hop Tamizha Adhi, A.R.K. Saravanan, Veeran, Tamil Cinema 26-May-2022 001

அந்த வகையில் டைட்டில் தற்போது வெளியாகியுள்ள நிலையில், படத்திற்கு ‘வீரன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக பல மாதங்கள் ஆரம்பகட்ட பணிகளை செய்துள்ளதாகவும் இந்த படம் தனது திரையுலக வாழ்வில் ஒரு திருப்புமுனை படமாக இருக்கும் என்றும் ஆதி தெரிவித்துள்ளார்.

ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைப்பில் உருவாகும் இந்த படத்தை ‘மரகத நாணயம்’ படத்தை இயக்கிய இயக்குனர் ஏ.ஆர்.கே. சரவணன் என்பவர் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.