குக் வித் கோமாளி ஸ்ருதிகா மகனின் செம புகைப்படம் இணையத்தில் வைரல்!

ஸ்ருதிகா மகனின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!

Shrutika, Cook With Comali, Cook With Comali 3, Tamil Cinema 26-May-2022 – குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஸ்ருதிகாவின் மகனின் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஆரம்பத்திலிருந்தே மிக பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் பெற்று வருகிறது. குறிப்பாக இரண்டாவது சீசன் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் தற்போது 3 வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த சீசனின் போட்டியாளர்களில் ஒருவர் ஸ்ருதிகா என்பது அறிந்ததே. பிரபல நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசன் பேத்தியான இவர் சூர்யா நடித்த ‘ஸ்ரீ’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு செல்பவர்களில் ஒருவர் சுருதிகா என்பதும் சில சமயம் இவர் குக்கா? அல்லது கோமாளியா? என்று சந்தேகம் வரும் அளவுக்கு அப்பாவியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஸ்ருதிகா தனது மகனுடன் ஆட்டோவில் சென்று ஷாப்பிங் செய்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். முதன்முதலாக ஸ்ருதிகாவின் மகனை பார்க்கும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version