ஏ.ஆர். முருகதாஸ் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு – ரசிகர்கள் உற்சாகத்தில்!

ஏ.ஆர். முருகதாஸ் படத்தின் தகவல் வெளியானது!

1947, A.R. Murugadoss, Gautham Karthik, Tamil Cinema 25-May-2022 – தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல இயக்குனர்களில் ஒருவர் ஏ.ஆர். முருகதாஸ் என்பதும் இவரது இயக்கத்தில் ரஜினிகாந்த், அஜீத், விஜய், சூர்யா உள்பட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1947, A.R. Murugadoss, Gautham Karthik, Tamil Cinema 25-May-2022 001

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களை இயக்குவது தொடங்கி பாலிவுட்டில் அமீர் கான் மற்றும் அக்‌ஷய் குமார் ஆகியோருடன் இணைந்து பிளாக்பஸ்டர் படங்கள் கொடுத்தது வரை, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இந்திய சினிமாவில் தனக்கான இடத்தை தக்கவைத்துள்ளார்.

தற்போது ஏ.ஆர். முருகதாஸ் ‘பர்பிள் புல் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனத்துடன் இணைந்து அற்புதமான திரைப்படங்களைத் தயாரிக்கவிருக்கிறார். இவர்களின் முதல் முயற்சியாக, மற்றொரு அற்புதமான புதிய திறமையாளரான என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் “1947 ஆகஸ்ட் 16” என்ற தலைப்பில் அதிரடியான வராலாற்று படத்தை உருவாக்குகின்றனர்.

1947, A.R. Murugadoss, Gautham Karthik, Tamil Cinema 25-May-2022

இயக்குநர் முருகதாஸிடம் நீண்ட காலமாக இணை இயக்குநராக இருந்தவர் என்.எஸ்.பொன்குமார் என்பது குறிப்பிடதக்கது.

அறிமுக நாயகி ரேவதியுடன் கௌதம் கார்த்திக் நடித்துள்ள இப்படம், இந்திய சுதந்திரத்தின் உச்சக்கட்டத்தின் போது, ஒரு கிராமத்தில் ஒரு துணிச்சலான வீரன் பிரிட்டிஷ் படைகளுடன் போரிடும் கதையைச் சொல்கிறது. தமிழ்நாட்டின் அழகிய பகுதிகளில் படமாக்கப்படும் இந்த படம் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது, தற்போது இப்படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் நடைபெற்றுவருகிறது.

ஏ.ஆர். முருகதாஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பர்பிள் புல் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து வழங்க, ஏ.ஆர். முருகதாஸ், ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் சௌத்ரி இந்த படத்தை தயாரித்துள்ளனர். ஆதித்யா ஜோஷி இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். விரைவில் திரையரங்குகளில் இந்த படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.