மனதை ஈர்க்கும் ‘கஞ்சா பூ கண்ணாலே’ பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது
Karthi, Aditi Shankar, Yuvan Shankar Raja, Tamil Cinema 25-May-2022 – சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில், முத்தையா இயக்கத்தில் உருவான ‘விருமன்’ திரைப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் பாடலான ‘கஞ்சா பூ கண்ணாலே’ என்ற பாடல் வெளியாகி இணையதளங்களில் வைரலாக வருகிறது.

யுவன் சங்கர் ராஜா கம்போஸ் பண்ணிய இந்த பாடலை அவரும் சித்ஸ்ரீராமும் இணைந்து பாடியுள்ளனர். குறிப்பாக சித்ஸ்ரீராமின் மயக்கும் குரலுக்கு ரசிகர்கள் மயங்கியே விட்டனர் என்று கூறலாம். இந்த பாடலை கருமாத்தூர் மணிமாறன் என்பவர் எழுதியுள்ளார்.

கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ்ராஜ், சூரி, ராஜ்கிரண், மைனா நந்தினி, மனோஜ் பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு செல்வகுமார் ஒளிப்பதிவும், வெங்கட்ராஜா படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.