தளபதி 68 படத்தின் கதை தெரியவந்தது – அட்லீ கொடுத்த தகவல்!

‘தளபதி 68’ குறித்து அட்லீ ரசிகர்களுக்கு கொடுத்த க்ளூ!

Vijay, Atlee, Thalapathy 66, Thalapathy 68, Tamil Cinema 25-May-2022 – விஜய் நடிக்க இருக்கும் 68 வது திரைப்படத்தை அட்லி இயக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் கதை குறித்த தகவலை இயக்குனர் அட்லி தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Vijay, Atlee, Thalapathy 66, Thalapathy 68, Tamil Cinema 25-May-2022

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ‘பிகில்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் குறிப்பாக இந்த படத்தில் குறுகிய நேரத்தில் வந்து போன ராயப்பன் கேரக்டர் விஜய்யின் வித்தியாசமான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் டுவிட்டரில் ‘பிகில்’ படத்தின் ராயப்பனின் முழு கதையும் சொல்லலாமே? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள அட்லி, ‘செஞ்சிட்டா போச்சு’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Vijay, Atlee, Thalapathy 66, Thalapathy 68, Tamil Cinema 25-May-2022 001

அந்த வகையில் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் ‘தளபதி 68’ திரைப்படம் ‘பிகில்’ திரைப்படத்தின் முந்தைய பாகமாக இருக்கலாம் என்றும் அதில் ராயப்பனின் இளவயது சம்பவங்கள் கொண்ட கதையாக இருக்கலாம் என்றும் தகவல்கள் கூறப்படுகிறது.

ஷாருக்கான் நடித்து வரும் ‘லயன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வரும் அட்லி இந்த படத்தை முடித்தவுடன் ‘தளபதி 68’ படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணியை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.