அஜித்துடன் மோத தயாரான கார்த்தி – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அஜித் படத்துடன் வெளியிட திட்டமிட்டுள்ள கார்த்தி படம்

Sardar, Rashi Khanna, Rajisha Vijayan, Tamil Cinema 25-May-2022 – அஜித் நடித்து வரும் ‘ஏகே 61’ திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதே தினத்தில் கார்த்தியின் ‘சர்தார்’ படமும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Sardar, Rashi Khanna, Rajisha Vijayan, Tamil Cinema 25-May-2022 001

கார்த்தி நடிப்பில் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சர்தார்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான பிரின்ஸ் பிக்சர்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் ‘சர்தார்’ திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sardar, Rashi Khanna, Rajisha Vijayan, Tamil Cinema 25-May-2022

அஜித்தின் ‘ஏகே 61’ படமும் தீபாவளி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அஜித்துடன் மோத கார்த்தி முடிவு செய்திருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

‘சர்தார்’ படத்தில் வித்தியாசமான இரண்டு வேடங்களில் கார்த்தி நடித்துள்ளார் என்பதும் இத்திரைப்படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஜீ.வி. பிரகாஷ்குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.