பாகுபலி – கேஜிஎப் பாணியில் உருவெடுக்க சூர்யா இணைந்த பிரபல இயக்குனர்!

பிரபல இயக்குனரின் புதிய பிரமாண்ட முயற்சியில் இணைந்த சூர்யா

Suriya, Siruththai Siva, Tamil Cinema 25-May-2022 – சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் ‘சூர்யா 41’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் முடிவடைகிறது. இதனை அடுத்து அவர் ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போவதாக செய்திகள் ஏற்கனவே வெளியானது.

Suriya, Siruththai Siva, Tamil Cinema 25-May-2022 001

இந்நிலையில் ‘ஜெய்பீம்’ இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Suriya, Siruththai Siva, Tamil Cinema 25-May-2022

மேலும் இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் இது ஒரு வரலாற்று கதையம்சம் கொண்ட படம் என்றும் ‘பாகுபலி’, ‘கேஜிஎப்’ போன்று பிரம்மாண்டமாக இந்த படத்தை உருவாக்க திட்டமிட்டு இருப்பதாகவும் அதுமட்டுமின்றி இந்த படமும் இரண்டு பாகங்களாக உருவாக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. எனவே இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.