ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் முயற்சி
Aishwarya, Rajinikanth, Dhanush, Sourav Ganguly, Tamil Cinema 25-May-2022 – இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க இருப்பதாக கூறப்படுவது வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ஐபிஎல் பிளே ஆப் போட்டிகளை பார்ப்பதற்காக தனது இரண்டு மகன்களுடன் கொல்கத்தா சென்ற நிலையில், அப்போது பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் இரவு டின்னருக்கு அவர் அழைக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் விரைவில் உருவாக்கப்பட இருப்பதாக கூறப்படுவதால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அந்த படத்தை இயக்குகிறாரா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இது குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ‘ஓ சாதிசால்’ என்ற பாலிவுட் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்தவுடன் அவர் கங்குலி படத்தை இயக்குவது குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஹிருத்திக் ரோஷன், ரன்பீர் கபூர், சித்தார்த் மல்ஹோத்ரா உள்பட ஒருசில பிரபல நடிகர்கள், கங்குலி வேடத்தில் நடிக்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.