நயன்தாராவுக்கு உணவு ஊட்டிவிடும் விக்னேஷ் சிவன் ரொமான்ஸ் வீடியோ வைரல்!

விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு சாப்பாடு ஊட்டிவிடும் வீடியோ இணையத்தில் வைரல்

Nayanthara, Vignesh Shivan, Tamil Cinema 25-May-2022 – இயக்குனர் விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணம் விரைவில் நடக்க இருக்கும் நிலையில் விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு சாப்பாடு ஊட்டிய வீடியோவை தனது சமூகவலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Nayanthara, Vignesh Shivan, Tamil Cinema 25-May-2022

கடந்த 6 வருடங்களுக்கு மேலாக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா காதலித்து வந்த நிலையில் இவர்களது திருமணம் வரும் ஜூன் 9 ஆம் தேதி திருப்பதியில் நடைபெற இருப்பதாகவும் இதற்கான அனைத்து பணிகளையும் இரு வீட்டாரும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் விக்னேஷ் சிவனின் குலதெய்வம் கோவிலுக்கு இருவரும் சென்ற புகைப்படங்கள் வீடியோக்கள் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

அதை தொடர்ந்து விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹோட்டல் ஒன்றில் அவரும் நயன்தாராவும் சாப்பிடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் நயன்தாராவின் தோள் மீது கையை போட்டு அவருக்கு சாப்பாடு ஊட்டும் காட்சியும் உள்ளது. செம ரொமான்ஸ் காட்சியாக உள்ள இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன.