‘தளபதி 66’ படத்தில் அடுத்து இணையும் பிரபல நடிகை – ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் அறிவிப்பு!

தளபதி 66 படத்தில் இணையும் பிரபல நடிகை மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் அறிவிப்பு!

Thalapathy 66, Vijay, Rashmika Mandanna, Mehreen Pirzada, Tamil Cinema 25-May-2022 – தளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 66’ திரைப்படத்தில் ஏற்கனவே நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் இன்னொரு நாயகி நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியாகியிருந்தது.

Thalapathy 66, Vijay, Rashmika Mandanna, Mehreen Pirzada, Tamil Cinema 25-May-2022

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் நடிகை மெஹ்ரின் பிர்ஜிதா நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுசீந்திரன் இயக்கிய ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான மெஹ்ரின் பிர்ஜிதா அதன் பின்னர் தனுஷ் நடித்த ‘பட்டாஸ்’ திரைப்படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல தெலுங்கு படங்களில் நடித்த அவர் தற்போது ‘தளபதி 66’ திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Thalapathy 66, Vijay, Rashmika Mandanna, Mehreen Pirzada, Tamil Cinema 25-May-2022 002

மேலும் ‘தளபதி 66’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்த நாள் ஜூன் 21 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுவதால் விஜய் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.

Thalapathy 66, Vijay, Rashmika Mandanna, Mehreen Pirzada, Tamil Cinema 25-May-2022 003
adbanner