சர்ச்சையை கிளப்பிய ‘விக்ரம்’ போஸ்டர் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸ்!

‘விக்ரம்’ படம் குறித்து சர்ச்சையை கிளப்பிய போஸ்டர் மீது போலீசார் வழக்கு!

Kamal Haasan, Vijay Sethupathi, Suriya, Tamil Cinema 24-May-2022 – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘விக்ரம்’. இப்படத்தில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Kamal Haasan, Vijay Sethupathi, Suriya, Tamil Cinema 24-May-2022

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ‘விக்ரம்’ படத்திற்கு வாழ்த்து தெரிவித்தும், வரவேற்கும் வகையில் மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ரசிகர்களால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. ஆனால் இதில் ஒரு போஸ்டர் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அதில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் கதிரேசன் மற்றும் வினோத் சேது ஆகிய இருவர் புகைப்படத்துடன் ஒட்டப்பட்டுள்ள விக்ரம் பட போஸ்டரில் சர்ச்சையான, ஆபாச வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து அந்த போஸ்டரை நீக்கிய போலீசார் இவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.