பிரபல இயக்குனரின் படத்தில் மாஸ் ஹீரோவுடன் முதல் முதலில் இணைந்த த்ரிஷா!

முதல் முறையாக பிரபல நடிகருடன் இணைந்துள்ள த்ரிஷா

Ram, Trisha, Mohanlal, Tamil Cinema 24-May-2022 – திரையுலகில் 20 வருடங்களாக நாயகியாக வலம் வரும் த்ரிஷா, ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு உள்பட பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்த நிலையில் தற்போது முதல் முறையாக மோகன்லாலுக்கு ஜோடியாக ஒரு படத்தில் இணைந்துள்ளார்.

Ram, Trisha, Mohanlal, Tamil Cinema 24-May-2022 001

இந்நிலையில் ‘த்ரிஷ்யம்’ என்ற படத்தை எடுத்து உலகப் புகழ்பெற்ற இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். ‘ராம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்குவதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது என்பதும் அதன் பின் மோகன்லால் வேறு சில படங்களில் பிஸியானதால் தொடர முடியாத நிலையில் இருந்தது.

இந்நிலையில் ‘ராம்’ படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடர படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்த படத்தில் முதல் முறையாக மோகன்லாலுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க உள்ளதை அடுத்து இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

adbanner