உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் விக்ரம் பிரபு படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!

விக்ரம் பிரபு அடுத்து நடிக்கும் படத்தின் உடல் சிலிர்க்க வைக்கும் டைட்டில், ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!

Rathamum Sathayum, Vikram Prabhu, Tamil Cinema 24-May-2022 – தமிழ் சினிமாவின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான விக்ரம் பிரபு அடுத்து நடிக்கும் படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி உள்ளது.

Rathamum Sathayam, Vikram Prabhu, Tamil Cinema 24-May-2022

பிரபுசாலமன் இயக்கத்தில் உருவான ‘கும்கி’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதை தொடர்ந்து ‘அரிமா நம்பி’, ‘இவன் வேறமாதிரி’ உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகர் விக்ரம் பிரபு. இவரது நடிப்பில் உருவான ‘டாணக்காரன்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Rathamum Sathayam, Vikram Prabhu, Tamil Cinema 24-May-2022 003

இந்நிலையில் ‘பாயும் ஒளி நீ எனக்கு’மற்றும் ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களில் நடித்துள்ள விக்ரம் பிரபுவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தது.

அந்தவகையில் சற்று முன் விக்ரம் பிரபு நடிக்கும் படத்திற்கு ‘இரத்தமும் சதையும்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதோடு, இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை ஹரிந்தர் பாலச்சந்தர் என்பவர் இயக்கவிருக்கிறார். உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.