காணாமல் போன பிரபல பாடகி கொலை – சிதைவடைந்த நிலையில் உடல் மீட்பு!

பாடகியின் கொலை செய்யப்பட்ட உடல் சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்டது

Sangeetha Sajith, Tamil Cinema 24-May-2022 – பிரபல பாடகி ஒருவர் கடந்த 12 நாட்களுக்கு முன் காணாமல் போன நிலையில் தற்போது உடல் சிதைந்து அவருடைய பிணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

Sangeetha Sajith, Tamil Cinema 24-May-2022

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பாடகி சங்கீதா. இவர் கடந்த மே 11 ஆம் தேதி காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்கள்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பாடகி சங்கீதாவை தேடி வந்த நிலையில் ஹரியானா மாநிலத்திலுள்ள பைனி பைரன் என்ற கிராமத்தில் ஒரு பெண்ணின் சிதைந்த உடல் இருப்பதை கேள்விப்பட்டு விரைந்து சென்று பார்த்த போது அங்கு உடல் சிதைந்து பிணமாக இருந்தது சங்கீதா தான் என்று அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி உள்ளனர் என்பதும் சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை செய்தபோது சங்கீதாவை திட்டமிட்டு கொலை செய்ததை அவர்கள் ஒப்புக் கொண்டதாகவும் தகவல்கள் தெருவிக்கின்றன.

இசை வீடியோ ஒன்றை எடுப்பதற்காக சங்கீதாவை வரவழைத்து கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்து உள்ளதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது. இந்நிலையில் பாடகி பிணமாக மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version