படப்பிடிப்பில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்து – நடிகை சமந்தாவுக்கு காயம்!

படப்பிடிப்பு தளத்தில் சமந்தாவுக்கு ஏற்பட்ட விபத்தால் பரபரப்பு!

Kushi, Samantha Ruth Prabhu, Vijay Deverakonda, Tamil Cinema 24-May-2022 – படப்பிடிப்பில் ஸ்டண்ட் காட்சியின் போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தால் நடிகை சமந்தாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Kushi, Samantha Ruth Prabhu, Vijay Deverakonda, Tamil Cinema 24-May-2022 001

விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா தற்போது நடித்து வரும் ‘குஷி’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக காஷ்மீரில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் ஸ்டண்ட் காட்சி படப்பிடிப்பின்போது எதிர்பாராது ஏற்பட்ட விபத்து காரணமாக விஜய்தேவரகொண்டா மற்றும் சமந்தா ஆகிய இருவருக்குமே முதுகில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் அது பெரிய அளவில் காயம் இல்லை என்பதால் இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அதன் பின் படப்பிடிப்பு தொடரப்பட்டது.

படப்பிடிப்பில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தால் சமந்தாவுக்கு காயம் ஏற்பட்ட தகவல் இணையதளங்களில் வைரலாகி வருவதை அடுத்து அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Exit mobile version