நயன்தாரா – விக்னேஷ் சிவன் குலதெய்வம் கோவிலுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்ட வீடியோ வைரல்!

நயன்தாரா – விக்னேஷ் சிவன் குலதெய்வம் கோவிலில் பொங்கல் வழிபாட்டின் போது எடுக்கப்பட்ட வீடியோ வைரல்!

Vignesh Shivan, Nayanthara, Tamil Cinema 24-May-2022 – நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வரும் ஜூன் 9 ஆம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படும் நிலையில் இருவரும் குலதெய்வம் கோயிலுக்கு சென்று பொங்கல் வைத்து வழிபாடு செய்த தகவல் வீடியோ மூலம் வெளியாகியுள்ளது.

Vignesh Shivan, Nayanthara, Tamil Cinema 24-May-2022

நேற்று சென்னையிலிருந்து திருச்சி வரை விமானத்தில் சென்ற நயன்தாரா – விக்னேஷ் சிவனுடன் விமான நிலைய ஊழியர்கள் செல்பி எடுக்க முயற்சி செய்தனர். அப்போது ஒரு பெண் செல்பி எடுக்க முயற்சி செய்ததை பார்த்த விக்னேஷ் சிவன், நயன்தாராவை அருகில் அழைத்து அந்த பெண்ணின் செல்போனை வாங்கி செல்பி எடுத்துக்கொண்டார்.

இது குறித்த தகவல்கள் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அவர்களுடைய மனிதநேயத்தை அங்கிருந்தவர்கள் பாராட்டினார்கள்.

இந்நிலையில் திருச்சியில் இருந்து சீரங்கம் கோவில் சென்று சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா அதனையடுத்து குலதெய்வம் கோயிலுக்கு சென்று பொங்கல் வைத்து வழிபட்டனர். இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.