வனிதா மகனின் 21வது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்தார்
Vanitha, Vijay Sri Hari, Bigg Boss Tamil, Tamil Cinema 24-May-2022 – நடிகை வனிதா விஜயகுமாரின் மகனுக்கு தற்போது 21 வயதான நிலையில் அவருக்கு தனது சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியான வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.

நடிகை வனிதா விஜயகுமார் கடந்த 2000-ம் ஆண்டு நடிகர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் பிறந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
மேலும் நீதிமன்ற உத்தரவுப்படி மகன் தந்தை வீட்டிலும், மகள் வனிதா வீட்டிலும் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் வனிதாவின் மகன் ஸ்ரீஹரி தற்போது 21 வயதை பூர்த்தி செய்ததை அடுத்து அவருடைய பிறந்த நாள் கொண்டாட்டம் நடத்தப்பட்டது. இதனையடுத்து தனது சமூக வலைத்தளத்தில் நடிகை வனிதா அவருக்கு நெகிழ்ச்சியான வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.

அவர் தனது வாழ்த்து பதிவில், “என் முதல் மற்றும் என்றென்றும் என் அன்புக்கு உரியவன்…. எப்போதும் உன் மேல் எனக்கு அன்பு அளவுக்கு அதிகமாக இருக்கும். ஒரு தாய் தன் பிள்ளைகள் மீது வைத்திருக்கும் அன்பு தான் புனிதமானது… எனக்கு முதலில் பிறந்த விஜய் ஸ்ரீ ஹரி இன்று 21 வயதாகிறது… என் அழகான மற்றும் உறுதியான விருப்பமுள்ள மிகவும் திறமையான மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் .. நீ எப்போதும் என் லட்டுவாகவே இருப்பாய்… கடவுள் உன் கனவுகள் அனைத்தையும் ஆசீர்வதிப்பார்” என பகிர்ந்துள்ளார்.