மீண்டும் வில்லனாக தமிழ் நடிகருடன் இணையும் பாலிவுட் பிரபலம்!

தமிழில் மீண்டும் வில்லனாக களமிறங்கும் பாலிவுட் பிரபலம்

One 2 One, Sundar C, Ragini Dwivedi, Anurag Kashyap, Tamil Cinema 24-May-2022 – தமிழில் முக்கிய பிரபலம் ஒருவர் நடித்துக்கொண்டிருக்கும் படத்துக்காக சென்னை மெட்ரோ ரயிலில் நடந்த படப்பிடிப்பில் பாலிவுட் பிரபலம் ஒருவர் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

One 2 One, Sundar C, Ragini Dwivedi, Anurag Kashyap, Tamil Cinema 24-May-2022 001

சுந்தர்சி ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் படங்களில் ஒன்று ‘ஒன் 2 ஒன்’. இந்த படத்தை த்ரிஷா நடித்த ‘பரமபதம் விளையாட்டு’ என்ற படத்தை இயக்கிய திருஞானம் இயக்கி வருகிறார்.

சுந்தர் சி ஹீரோவாகவும் பாலிவுட் பிரபலம் அனுராக் காஷ்யப் வில்லனாகவும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். ஏற்கனவே நயன்தாராவின் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாக அனுராக் காஷ்யப் மிரட்டிய நிலையில் மீண்டும் இந்த படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

One 2 One, Sundar C, Ragini Dwivedi, Anurag Kashyap, Tamil Cinema 24-May-2022

இந்த படத்தில் வங்கி அதிகாரியாக சுந்தர் சி நடித்து இருப்பதாகவும் அவரை மிரட்டி ஒரு முக்கிய காரியத்தை சாதிக்கும் வில்லனாக அனுராக் நடிப்பதாகவும் இயக்குநர் திருஞானம் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு ரயிலில் நடந்ததாகவும், ரயிலில் படப்பிடிப்பு நடந்த பல படங்கள் வெற்றி பெற்றதை அடுத்து அந்த வரிசையில் இந்த படமும் இணையும் என்றும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேடு ரயில்வே ஸ்டேஷனிலும் மெட்ரோ ரயில் உள்ளேயும் பல முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என்றும் இயக்குனர் திருஞானம் தெரிவித்துள்ளார்.