உதயநிதி படத்தில் இணைந்து கொண்ட கமல் பட நடிகர்!
Maamannan, Udhayanidhi stalin, Vadivelu, Fahadh Faasil, Tamil Cinema 23-May-2022 – மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், உருவாகிவரும் ‘மாமன்னன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ‘விக்ரம்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் படப்பிடிப்பில் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகிவரும் ‘மாமன்னன்’ படத்தில் முக்கிய வேடத்தில் பகத் பாசில் நடிக்க இருப்பதாகவும், அதுமட்டுமின்றி வைகைப்புயல் வடிவேலு இந்த படத்தில் சிறந்த கேரக்டரில் நடித்து வருவதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளிவந்தன.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக உதயநிதி, கீர்த்தி சுரேஷ் காட்சிகளின் படப்பிடிப்பு நடந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பில் பகத் பாசில் இணைந்துள்ளார். இவர் வரும் 3 ஆம் தேதி வெளியாக இருக்கும் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றும் மாமன்னன் படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார் எனபதும் இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.