‘தளபதி 66’ படத்தில் விஜய்க்கு இருவேடங்களா? பிரகாஷ்ராஜ் பதிவு வைரல்!

தளபதி 66 படத்தின் கசிந்த தகவல்

Thalapathy 66, Vijay, Rashmika Mandanna, Tamil Cinema 23-May-2022 – தளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 66’ திரைப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் கசிந்த நிலையில் அந்த தகவல் தற்போது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

Thalapathy 66, Vijay, Rashmika Mandanna, Tamil Cinema 23-May-2022

சமீபத்தில் விஜய் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்களை சந்திக்க சென்றபோது உள்ள கெட்டப் தான் ‘தளபதி 66’ படத்தின் விஜய் கெட்டப் என்று கூறப்பட்டது. இந்த கெட்டப்பில் அவர் இளமையான தோற்றத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சற்று முன்னர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரகாஷ்ராஜ், ‘தளபதி 66’ படப்பிடிப்பின்போது விஜய்யுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் விஜய் சற்று வயதான மற்றும் மாறுபட்ட ஹேர்ஸ்டைல் கெட்டப்பில் இருப்பதை தொடர்ந்து இந்த படத்தில் விஜய் இரு வேடங்களில் நடிப்பது உறுதி செய்யப்பட்டதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

“ஹாய் செல்லம்ஸ் நாங்கள் மீண்டும் திரும்பி விட்டோம் தளபதி 66” என பிரகாஷ்ராஜ் பதிவு செய்துள்ள இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.