‘டிமாண்டி காலனி’ இரண்டாம் பாகம் குறித்து அஜய் ஞானமுத்து கொடுத்த சஸ்பென்ஸ்!

டிமாண்டி காலனி இரண்டாம் பாகம் குறித்து அஜய் ஞானமுத்து தெரிவித்தது

Demonte Colony 2, Arulnithi, Ajay gnanamuthu, Tamil Cinema 23-May-2022 – அருள்நிதி நடித்த ‘டிமான்டி காலனி’ வெளியாகி ஏழு வருடங்கள் கடந்ததை அடுத்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Demonte Colony 2, Arulnithi, Ajay gnanamuthu, Tamil Cinema 23-May-2022

அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி நடிப்பில், கடந்த 2015 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி ‘டிமான்டி காலனி’ திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்த படம் வெளியாகி ஏழு ஆண்டுகள் ஆனதை அடுத்து நேற்று படக்குழுவினர் இதனை கொண்டாடினார்கள்.

இந்நிலையில் இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது சமூக வலைத்தளத்தில் ‘டிமாண்டி காலனி’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டு உள்ளதாக கூறியுள்ளார். ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கப் போவதில்லை என்றும் அவருடைய உதவியாளர் வெங்கி வேணுகோபால் இயக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் கதையை எழுதுவதோடு இந்த படத்தை அஜய் ஞானமுத்துவே தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ‘டிமாண்டி காலனி’ முதல் பாகத்தில் அருள்நிதி இறந்துவிடுவதோடு படம் முடிந்துவிடும். ஆனால் அருள்நிதியை வைத்து மீண்டும் எப்படி இரண்டாம் பாகம்? என்ற கேள்விக்கு ‘அது சஸ்பென்ஸ் என்றும் ஆனால் முதல் பாகத்தில் நடித்த அருள்நிதி உள்பட முக்கிய கேரக்டர்களும், மேலும் சில புதிய கேரக்டரில் சிலரும் நடிக்கவுள்ளனர் என்றும், இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்கும் என்றும் அஜய்ஞானமுத்து தெரிவித்துள்ளார்.