விக்ரமுடன் மோத முடிவு செய்த விஷால் பட அதிகாரபூர்வ அறிவிப்பு!

விஷால் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிப்பு!

Vishal, Sunaina, Laththi, Tamil Cinema 23-May-2022 – நடிகர் விக்ரம் படம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் தனது படத்தை ரிலீஸ் செய்ய இருப்பதாக விஷால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Vishal, Sunaina, Laththi, Tamil Cinema 23-May-2022 002

விஷால் நடிப்பில் உருவான ‘லத்தி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 12 என தற்போது விஷால் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.

இந்நிலையில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி விக்ரம் நடித்த ‘கோப்ரா’ திரைப்படமும் ரிலீஸாக இருக்கிறது. அதை தொடர்ந்து ஆகஸ்ட் 12 ஆம் தேதி சமந்தா நடித்த நான்கு மொழி திரைப்படமான ‘யசோதா’ திரைப்படமும் ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த நிலையில் விக்ரம் மற்றும் சமந்தாவுடன் மோத விஷால் தயாராகிவிட்டார்.

மேலும் நடிகர்கள் ராணா மற்றும் நந்தா தயாரிப்பில் உருவாகி வரும் ‘லத்தி’ படத்தை வினோத் குமார் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பதும் இந்த படத்தின் நாயகியாக சுனைனா நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.