பிரபல காமெடி நடிகருடன் ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடலுக்கு நடனம் ஆடிய பிரியங்கா மோகன்!
Priyanka Mohan, Redin Kingsley, Tamil Cinema 23-May-2022 – நடிகை பிரியங்கா மோகன் தற்போது துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளார் என்பதும் அவருடன் நெல்சன் குடும்பத்தினர், கவின் உள்பட பலரும் சென்றுள்ளனர் என்பது அறிந்ததே.

துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ள இவர்களின் குரூப் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருவது காணக்கூடியதாக உள்ளது. இந்த நிலையில் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான ‘பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற ‘ஜாலியோ ஜிம்கானா’ என்ற பாடலுக்கு நடிகை பிரியங்கா மோகன், காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லியுடன் இணைந்து நடனமாடிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை நடிகை பிரியங்கா மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு பலரால் லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.