அதிதி ஷங்கர் அடுத்து நடிக்கவுள்ள பிரபல ரொமான்டிக் இயக்குனரின் படம் – செம அப்டேட்!

ஷங்கர் மகள் அடுத்து இணையவிருக்கும் பிரபல இயக்குனரின் படம்!

Aditi Shankar, Gautham Vasudev Menon, Tamil cinema 23-May-2022 – பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர், முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘விருமன்’ என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தில் அவர் கிராமத்து பெண் கேரக்டரில் நடித்து உள்ளார் என்பதும்குறிப்பிடத்தக்கது.

Aditi Shankar, Gautham Vasudev Menon, Tamil cinema 23-May-2022

மற்றும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி என சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் அதிதி ஷங்கரின் முதல் படத்தை பார்க்க ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் சிம்பு நடிக்க உள்ள ‘கொரோனா குமார்’ என்ற படத்தில் நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது ரொமான்டிக் வெற்றி படங்களை இயக்குவதில் முன்னணியில் இருக்கும் கௌதம் மேனனின் அடுத்த படத்தில் அதிதி ஷங்கர் நடிக்கவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

அந்தவகையில் மலையாளத்தில் சமீபத்தில் வெளியான ‘கப்பேலா’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் படத்தை கௌதம் மேனன் இயக்க இருப்பதாகவும் இந்த படத்திலும் அதிதி ஷங்கர் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் நாயகியின் கேரக்டர் கிராமத்து பெண் என்ற நிலையில் மீண்டும் அதிதி ஷங்கர் கிராமத்து பெண் கேரக்டரில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறப்படுகிறது.

Exit mobile version