வாடிவாசலுக்கு முன் மற்றைய படத்துக்கு இயக்குனரை உறுதி செய்த சூர்யா!

சூர்யா அடுத்து இணையும் வெற்றிப்பட இயக்குனரின் படம் குறித்த தகவல்

Suriya, Vaadivaasal, Suriya 41, Tamil Cinema 23-May-2022 – பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘சூர்யா 41’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி அருகே நடந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் கோவாவில் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Suriya, Vaadivaasal, Suriya 41, Tamil Cinema 23-May-2022

இந்நிலையில் இயக்குனர் பாலாவின் ‘சூர்யா 41’ படத்தை முடித்தவுடன் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் இந்த படத்தின் சோதனை படப்பிடிப்பில் முன்னர் சூர்யா கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி நடித்து வரும் ‘விடுதலை’ என்ற படத்தில் பிசியாக இருப்பதால் உடனே ‘வாடிவாசல்’ படத்தை ஆரம்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Suriya, Vaadivaasal, Suriya 41, Tamil Cinema 23-May-2022 001

அதனால் வாடிவாசலுக்கு முன் ஒரு திரைப்படத்தில் நடிக்க சூர்யா முடிவு செய்திருப்பதாகவும் ‘ஜெய்பீம்’ இயக்குனர் ஞானவேலுடன் அவர் மீண்டும் இணைய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை சூர்யா சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் உறுதி செய்துள்ளார். இந்த படத்தை சூர்யாவின் ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.