ஐஸ்வர்யா ராஜேஷ் லேட்டஸ்ட் படங்கள் 23 மே 2022

Aishwarya Rajesh 23 – 05 – 2022

Aishwarya Rajesh – 23rd May 2022 – ஒரு இந்திய நடிகை ஆவார், இவர் தெலுங்கு மற்றும் மலையாளம் திரைப்படங்களுடன் அதிகமாக தமிழ் படங்களில் பணிபுரிகிறார். 1990 ஜனவரி 10 ஆம் தேதி தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்தார். ஐஸ்வர்யா ராஜேஷ் தனது நடிப்பு துறையை தொலைக்காட்சி தொகுப்பாளராக சன் டிவியின் அசத்த போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் தொடங்கினார்.

2010ல் நீதானா அவன் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அட்டகத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை, ஆறாது சினம், மனிதன், தர்ம துரை, பறந்து செல்ல வா, கட்டப்பாவா காணோம், ஜெமினி கணேசனும் சுருளி ராஜாவும், செக்க சிவந்த வானம், வட சென்னை, கனா,டக் ஜெகதீஷ், வேர்ல்ட் பேமஸ் லவர், ரிபப்லிக் ஆகியவை குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்.

அவரது வரவிருக்கும் படங்கள் டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ், துருவ நட்சத்திரம், புலிமாட. அவர் பெற்ற பல விருதுகளில் சிலவை 6வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளின் தர்மதுரை படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருது , காக்கா முட்டைக்காக தமிழ்நாடு மாநில திரைப்பட விருது, 66வது பிலிம்பேர் விருதுகள் தென்னிந்திய சிறந்த நடிகை (விமர்சகர்கள்) கனா படத்திற்காக , 10வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளின் சிறந்த நடிகைக்கான விருது க பே ரணசிங்கத்திற்காக போன்றவையாகும்.