சிவாஜி கணேசன் குடும்பத்தின் மற்றுமொருவர் சினிமாவில் களமிறங்குகிறார்
Sivaji Ganesan, Dharshan, Tamil Cinema 23-MAy-2022 – நடிகர் திலகம் சிவாஜிகணேசன் குடும்பத்திலிருந்து இன்னொரு வாரிசு நடிகர் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் பிரபு மற்றும் ராம்குமார் ஆகிய இருவருமே திரைப்படங்களில் நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. பிரபுவின் மகன் விக்ரம் தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். அதேபோல் ராம்குமாரின் மகன் துஷ்யந்த் ஏற்கனவே ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ராம்குமாரின் இன்னொரு மகன் தர்ஷன் என்பவரும் தற்போது சினிமாவில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அவர் நடிக்க இருக்கும் திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.