Andrea Jeremiah 23 -05 – 2022
Andrea Jeremiah – 23rd May 2022 – ஒரு இந்திய நடிகை, பின்னணிப் பாடகி மற்றும் இசைக்கலைஞர், முக்கியமாக தமிழ் மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆண்ட்ரியா மரியா ஜெரிமியா டிசம்பர் 21, 1985 அன்று தமிழ்நாட்டின் அரக்கோணத்தில் பிறந்தார். இவர் தமிழ் திரையுலகில் 2007 ம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனனின் பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.
ஆண்ட்ரியா தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, விஸ்பரூபம், என்றென்றும் புன்னகை, அரண்மனை, வலியவன், உத்தம வில்லன், இது நம்ம ஆளு, தரமணி, வட சென்னை உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து பிரபலமானார். இவர் அன்னையும் ரசூலும், லண்டன் பிரிட்ஜ், லோஹாம்: மஞ்சள் உலோகம், தோப்பில் ஜோப்பன் போன்ற மலையாளப் படங்களிலும் தடாக்கா என்ற தெலுங்குப் படத்திலும் நடித்துள்ளார்.
ஆண்ட்ரியாவின் வெளிவர இருக்கும் படங்கள் மாளிகை, பிசாசு 2, நோ என்ட்ரி , கா, வட்டம் போன்றவையாகும். எப்போதும் சமூக வலைதளங்களில் தீவிரமாக இருக்கும் நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையா, சமீபத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதோ அந்த படங்களின் தொகுப்பு.
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.