கார்த்தியுடன் இணையும் அருண்ராஜா காமராஜ் படம் குறித்த தகவல் – வேற லெவல் அப்டேட்!

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கும் கார்த்தி படம்!

Arunraja Kamaraj, Karthi, Nenjuku Needhi, Tamil Cinema 23-May-2022 – ‘கனா’ படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் படனடிகரும், பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜ். தொடர்ந்து தற்போது ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். அவரின் அடுத்த திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான கார்த்தி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Arunraja Kamaraj, Karthi, Nenjuku Needhi, Tamil Cinema 23-May-2022

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அருண்ராஜா காமராஜ் இயக்கும் அடுத்த படத்தில் கார்த்தி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படம் குறித்த ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இத்திரைப்படத்தில் வில்லனாக நடிக்க பிரபல தெலுங்கு ஹீரோ ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுவதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

adbanner