தனுஷ் தரப்பில் இருந்து அனுப்பிய நோட்டீஸ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
நடிகர் தனுஷ் தனது மகன் என்று மதுரையைச் சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதுமட்டுமின்றி ஊடகங்களிலும் தனுஷ் தனது மகன் தான் என்று ஒரு சில புகைப்படங்களையும் காட்டி பேட்டி அளித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கை மதுரை உயர்நீதிமன்றக் கிளை ஏற்கனவே ரத்து செய்துவிட்ட நிலையில், தனுஷ் தங்களை கொலை செய்ய முயற்சித்ததாக, நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து நீதிமன்ற உத்தரவை பெற்று விட்டதாகவும் கதிரேசன் மீனாட்சி தம்பதியினர் நடிகர் தனுசுக்கும் அவரது தந்தை கஸ்தூரி ராஜாவுக்கும் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.

இதை தொடர்ந்து கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தவறினால் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர நேரிடும் என்றும் தனுஷ் மற்றும் கஸ்தூரி ராஜா சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த நோட்டீசால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.