இம்முறை ரஜினிகாந்த் பிறந்த நாள் பரிசு இதுதான் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாத்த படத்தை தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கம் பெயரிடப்படாத தலைவர் 169 படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் அங்கு ஓரிரு வாரங்கள் தங்கி இருந்து உடல் நலம் குறித்த பரிசோதனை முடிந்த பின் திரும்பி வருவார் என்றும், அதன் பின்னர் ஆகஸ்ட் மாதம் ‘தலைவர் 169’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Rajinikanth, Sivakarthikeyan, Aishwarya Rai, Nelson DilipKumar, Thalaivar 169

அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்தில், மீண்டும் ரஜினியுடன் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் இளம் நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் First லுக்ஐ ரஜினிகாந்தின் பிறந்தநாளில் வெளியிட திரைப்பட குழு திட்டமிட்டுள்ளதாக கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.