‘நெஞ்சுக்கு நீதி’ படத்திற்கு எதிராக இந்துக்கள் ஒன்று சேருங்கள் என குரல் கொடுத்த தமிழ் நடிகை!

‘நெஞ்சுக்கு நீதி’ படத்திற்கு எதிராக குரல் கொடுத்த தமிழ் நடிகை!

‘நெஞ்சுக்கு நீதி’ படத்தில் தேவையற்ற திராவிட மாடல் வசனங்கள் இருப்பதாகவும், இந்த படம் பிராமண அவதூறு என்றும், இந்த படத்துக்கு எதிராக இந்துக்கள் தங்கள் ஒற்றுமையை காட்ட வேண்டும் என்றும், பாஜக பிரபலமும் நடிகையுமான காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

Nenjuku Needhi, Udhayanidhi Stalin, Tanya Ravichandran, Aari Arujunan, Tamil Cinema 21-May-2022

அதில் இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது, “நெஞ்சுக்கு நீதி படம் பார்த்தேன், இந்த படம் இந்தி ரீமேக் Article 15 ஆக நன்றாக இருந்தது, ஆனால் இளம் பெண்ணின் பலாத்காரத்தின் வலியை விட சாதி ஆதிக்கம் செலுத்தியது. கற்பழிப்பு தான் உண்மையான வலி. சாதி ஒடுக்கப்படுவதை விட பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள். நாம் ஏன் அதை உணரவில்லை.

எங்கோ நான் இந்த படத்தில் பெண்களின் வலி என்னால் உணர முடியவில்லை. எதிர்பார்த்தபடி தேவையற்ற 1 அல்லது 2 திணிக்கப்பட்ட சில திராவிட மாடல் உரையாடல்கள் காரணமாக இருக்கலாம்.

Nenjuku Needhi, Udhayanidhi Stalin, Tanya Ravichandran, Aari Arujunan, Tamil Cinema 21-May-2022 001

நெஞ்சுக்கு நீதி திரைப்படம் பிராமண அவதூறு, பிராமண சகோதர சகோதரிகளின் அவதூறுகளுக்கு எதிராக அனைத்து இந்துக்களும் எழுந்து நிற்க வேண்டிய நேரம் இது. அனைத்து சாதி இந்து ஒற்றுமைக்காக பிராமணர்களுக்கு மட்டுமின்றி இந்து ஒற்றுமையை காட்டுங்கள்.” என தெரிவித்துள்ளார்.