‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் வெளிவந்த ஓடிடி ரிலீஸ் தகவல்!
Simbu 21st May 2022 : சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் திரையரங்குகளின் ரிலீஸுக்கு பின்னர் ஓடிடியில் ரிலீஸாவது குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கவுதம் மேனன் இயக்கத்தில், சிம்பு நடிப்பில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் படப்பிடிப்பு சென்னை, மும்பை உள்பட பல்வேறு பகுதிகளில் நடந்து முடிந்த நிலையில் தற்போது இறுதிகட்ட தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் வியாபாரத்தை படக்குழுவினர் ஆரம்பித்துள்ளனர். முதல்கட்டமாக இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆன பின்னர் அமேசான் ப்ரைம் ஓடிடியில் ரிலீஸ் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாகவும் இந்த படத்திற்காக அமேசான் மிகப்பெரிய தொகையை கொடுத்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இப்படத்தில் சிம்பு, சித்தி இதானி, ராதிகா, சித்திக், நீரஜ் மகாதேவன் உள்பட பலர் நடித்து வரும் நிலையில் இந்த படத்தை வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தின் வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.