அயலான் படத்தின் ரிலீஸ் குறித்து வெளியாகிய சூப்பர் தகவல்
வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டான்’கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது. தற்போது அவர் நடித்துள்ள ‘அயலான்’ படத்தின் ரிலீஸ் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

2015 ஆம் ஆண்டு வெளியான ‘இன்று நேற்று நாளை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரவிக்குமார். அதை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து ‘அயலான்’ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே நிறைவு பெற்றது.
இப்படத்தில் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் சார்ந்த காட்சிகள் அதிகம் உள்ளதால், சி.ஜி. பணிகளுக்கு அதிக நாள் தேவைப்படுகிறது. இதனால் தான் படம் வெளியாவதில் தாமதமாகிறது எனப் படக்குழு தெரிவித்திருந்தது. இதனிடையே கடந்த ஆண்டு வெளியான இப்படத்தின் ‘வேற லெவல் சகோ’ என்ற பாடல் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ‘அயலான்’ படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று இப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழுவினரால் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.