அஜித் – விஜய் படங்களை அட்லி, எச்.வினோத் இயக்காமல் இருந்திருந்தால்.. மீம்ஸ்க்கு மனோபாலா கருத்து வைரல்!

விஜய்-அஜித் படத்தை தொடர்ச்சியாக இயக்கிய இயக்குனர்களின் மீம்ஸ்க்கு கருத்து வெளியிட்ட மனோபாலா

விஜய் படங்களை அட்லீயும், அஜித் படங்களை எச். வினோத்தும் இயக்காமல் இருந்தால் விஜய் ரசிகர்கள் மட்டும் அஜித் ரசிகர்கள் மத்தியில் எந்தவிதமான வரவேற்பு இருந்திருக்கும் என்பது குறித்த மீம்ஸ்க்கு நடிகரும் இயக்குனருமான மனோபாலா தனது கருத்தை முன்வைத்துள்ளார்.

Vijay, Ajith, Manobala, H. Vinoth, Atlee, Tamil Cinema 21-MAy-2022

தளபதி விஜய் நடித்த தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய மூன்று படங்களை இயக்குனர் அட்லி இயக்கியிருந்தார். அதே போல் தல அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் ‘ஏகே 61’ படங்களை இயக்குனர் எச்.வினோத் இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில், விஜய் படங்களை இயக்கியதால் அட்லி மீது அஜித் ரசிகர்களும், அஜித் படங்களை இயக்கியதால் எச்.வினோத் மீது விஜய் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்களது கடுமையான வெறுப்பை வெளிப்படுத்தி வருகின்றனர் என்று ஒரு மீம்ஸ் கடந்த சில தினங்களாக இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் அந்த மீம்ஸ் குறித்து நடிகரும் இயக்குனருமான மனோபாலா தனது சமூக வலைத்தளத்தில் கருத்து கூறும் வகையில் ‘உண்மை’ என்று பதிவு செய்துள்ளார்.